வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (19/10/2018)

கடைசி தொடர்பு:22:10 (19/10/2018)

அக்‌ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை!

2014-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் 'மங்கள்யான்' உருவான கதை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் படமாக்கப்பட இருக்கிறது. சமீபமாக, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் ஆர்வம் காட்டிவரும் அக்‌ஷய் குமார்,  'பேட்மேன்', 'கோல்டு' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அக்‌ஷய் குமார்

'பா', 'ஷமிதாப்', 'பேட் மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பால்கி இயக்குகிறார். மேலும், மூன்று ஹீரோயின்கள் நடிக்கவிருக்கிறார்கள். மங்கள்யான் விண்கலத்தை உருவாக்கும் தலைமை விஞ்ஞானியாக நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். 2007-ம் ஆண்டில் வெளியான் 'ஹே பேபி', 'புல் புலாயா' ஆகிய படங்களுக்குப் பிறகு இப்படத்தில் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். தமிழில் 'டிக் டிக் டிக்', தெலுங்கில் 'அந்தாரிக்‌ஷம் 9000 kmph' ஆகிய விண்வெளி படங்களைத் தொடர்ந்து இந்தியில் இப்படம் உருவாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க