`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப்! - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால் | Dileep receives a good news as well as bad news

வெளியிடப்பட்ட நேரம்: 01:46 (20/10/2018)

கடைசி தொடர்பு:07:22 (20/10/2018)

`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப்! - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்

2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு, பிரபல மலையாள நடிகைக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, 'நடிகர் திலீப் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கப்பட வேண்டும்' என்று அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த பலர் வலியுறுத்தினர். இந்த வழக்கின் காரணமாக திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், மோகன்லால் அம்மாவுக்கு தலைவராக பதவியேற்றதையடுத்து திலீப் அமைப்பில் மீண்டும் சேர்க்கப்பட்டார். பார்வதி, ரம்யா நம்பீசன், ரேவதி, பத்மப்ரியா ஆகியோர் திலீப் அமைப்பில் சேர்ந்ததன் காரணத்தினால் பதவி நீக்கம் செய்தனர். இதையடுத்து, திலீப்பை மீண்டும் அமைப்பில் சேர்ப்பது பற்றி தங்களது முடிவை அம்மா மாற்றியது. 

திலீப்

இந்நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால், ``திலீப் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இதற்கு ஒப்புதல் தெரிவித்து திலீப் நிரந்தரமாக அம்மா அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். நல்ல செய்தி என்னவென்றால், காவ்யா மாதவன் மற்றும் திலீப் தம்பதிக்கு நேற்று பெண்குழந்தை பிறந்துள்ளது.