'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய்! - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த் | Actor ramesh kanna son jaswath speaks about vijay!

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (20/10/2018)

கடைசி தொடர்பு:16:15 (20/10/2018)

'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய்! - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், 'சர்கார்'. படத்தின் தலைப்பே அரசியல் குறியீடாக இருப்பதால், கண்டிப்பா படமும் அரசியல் பேசும்னு விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க. இந்நிலையில், படத்தின் டீசர் நேற்று வெளியாகி வைரல் ஆனது. 

விஜய் சர்கார்

இந்தச் சூழ்நிலையில், படத்தின் டீசர் காட்சிகளில் இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணாவின்  மகன் ஐஸ்வந்த் இடம்பெற்றிருந்தார். படத்தில் இவர் நடித்திருக்கிறாரா என்று தெரிந்துகொள்ள இவரிடம் பேசினோம். 

'ஸ்பைடர்' படத்திலிருந்து முருகதாஸ் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்க்கிறேன். முருகதாஸ் சார், அவர்கிட்ட வேலைபார்க்கிற உதவி இயக்குநர்களைப் படத்தில் ஏதாவதொரு காட்சியில் இடம்பெற வைப்பார். அதுமாதிரிதான் இந்தப் படத்துல நான் நடிச்ச காட்சியும். ஒருசில காட்சிகளில் மட்டும் வருவேன். மத்தபடி சொல்றமாதிரியான ரோல் இல்லை. என்னோட கனவெல்லாம்  சினிமாவுல இயக்குநரா  வரணும் அப்படிங்கிறதுதான். 

விஜய்

ரமேஷ் கண்ணாவோட மகன்தான் நான்கிற விஷயம் விஜய் சாருக்கு படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சபோதே தெரியும். 'அப்பா எப்படியிருக்கார்'னு நலம் விசாரிச்சார். அவ்வளவுதான். மத்தபடி எங்க ரெண்டு பேருக்கும் இடையே பெரிய பேச்சுவார்த்தை நடந்தது இல்லை''  என்று சுருக்கமாக முடித்தார் ஜஸ்வந்த். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க