Published:Updated:

`பப்புக்கே போகாதவர் என் தந்தை!'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா

`பப்புக்கே போகாதவர் என் தந்தை!'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா
News
`பப்புக்கே போகாதவர் என் தந்தை!'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா

`பப்புக்கே போகாதவர் என் தந்தை!'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா

`பாலியல் துன்புறுத்தலா? அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலே விளம்பரத்துக்காக # MeToo இயக்கத்தைப் பயன்படுத்துவதா’ என்று நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, நடிகை ஸ்ருதி ஹரிஹரனைச் சாடியுள்ளார். 


 

சமூக வலைதளங்களில் # MeToo என்னும் ஹேஷ்டாக்கின் கீழ் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் தங்கள் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களைக் குறித்து எழுதி வருகின்றனர். அந்த வரிசையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மூத்த நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

# MeToo ஹேஷ்டாக்கில் அவர் பதிவிட்ட தகவல் வருமாறு: ``2016-ம் ஆண்டு `விஸ்மயா’ என்ற படத்தில் அர்ஜூனின் மனைவியாக நான் நடித்தேன். முதல் இரண்டு நாள் படப்பிடிப்பு எந்தப் பிரச்னையுமின்றி சென்றது. அன்றைய நாள் நெருக்கமான காதல் காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான ஒத்திகையின்போது என் அனுமதி இல்லாமலேயே அர்ஜூன் என்னைக் கட்டித் தழுவினார். அத்துமீறி நடந்து கொண்டார். என் சங்கடத்தை இயக்குநர் புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும், என் மேக் அப் டீமிடம் இதைப் பற்றிக் கூறி வருந்தினேன். அதன் பிறகு அவருடன் வேல செய்யவே பிடிக்கவில்லை. படப்பிடிப்புக்குப் பிறகு வெளியே சந்திக்க அழைத்தார். நான் ஒப்புக்கொள்ளவில்லை’ என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


 

`விஸ்மயா’ படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இதுகுறித்து பகிர்ந்த ஃபேஸ்புக் பதிவில், `நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டு எனக்குப் பெரும் அதிர்ச்சியளித்தது. இரு மொழிகளில் வெளியான நிபுணன் திரைப்படத்தில் அர்ஜூனின் மனைவியாக ஸ்ருதி நடித்தார். அது ஒரு நெருக்கமான காதல் காட்சி. நாங்கள் படப்பிடிப்புக்கு முன்பு, அந்தக் காட்சிக்கான ரிகர்சல் பார்த்தோம். அந்தக் காட்சியை மேம்படுத்தும் பொருட்டு ரிகர்சல் நடைபெற்றது. பிறகு, காட்சி குறித்து விவாதித்தோம். இது நடந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அது குறித்தான தகவல்கள் எனக்கு முழுமையாக நினைவில்லை. நெருக்கமான காதல் காட்சி படமாக்கும்போது இருப்பதைவிட ஸ்கிரிப்ட்டில் மிகவும் அன்னியோன்னியமாக இருக்கும். இதை அர்ஜூன் ஸ்கிரிப்ட்டிலே குறைக்கச் சொன்னார்.  `எனக்கு டீன்ஏஜில் மகள் இருக்கிறாள். இனிமேலும் இதுபோன்ற காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது' என்றார். நான் அதைப் புரிந்துகொண்டு திருத்தினேன். மேலே நான் கூறியது முழுவதும் உண்மையான நிகழ்வுகள்தான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.


 

இதனிடையே நேற்று (21/10/2018) பெங்களூரில் இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்ருதி, `எனக்கு அர்ஜூன் ரசிகர்களிடமிருந்து தொடர்ச்சியாக மிரட்டல் வருகின்றன. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மேலும் அர்ஜூன் குறித்து தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத 4 பெண்கள் பாலியல் புகார் கூறியுள்ளனர். நான் காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். முதல் தகவல் அறிக்கை பதிவானதும் உங்களிடம் காண்பிக்கிறேன்’ என்று நிருபர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.


 

அர்ஜூன் மீது எழுந்துள்ள இந்தப் பாலியல் புகாருக்கு அவரின் மகள் ஐஸ்வர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது.. 

 `எதன் அடிப்படையில் என் தந்தை மீது ஸ்ருதி # MeToo புகார் கூறுகிறார். நானும் ஒரு நடிகைதான். எனக்கு அனுபவம் மிகக்குறைவுதான். ஆனால் படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதும் எனக்குத் தெரியும். என் தந்தை இயக்கிய ஒரு படத்தில் நான் நடித்திருக்கிறேன். காதல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை உதவி இயக்குநருடன் சேர்ந்து என் தந்தை எனக்கு நடித்துக் காண்பித்தார். உதவி இயக்குநருடன் அன்று அவர் நெருக்கமாக நடித்ததால் அந்த நபர் வெளியே வந்து அர்ஜூன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியுமா. இவையெல்லாமே நடிகர்- நடிகையரின் வேலையில் ஒரு பகுதியாகும். அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறியிருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே. என் தந்தை அவுட்டிங் அழைத்ததாக வேறு ஸ்ருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது. 

விஸ்மயா படம் குறித்து என்னிடமும் என் சகோதரியிடமும் என் தந்தை பேசிக்கொண்டிருந்தபோது படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பதாக இயக்குநர் கூறியதாகச் சொன்னார். மேலும் அந்தக் காட்சிகளை குறைக்குமாறு சொல்லியிருப்பதாகவும் கூறினார். ஸ்ருதி முன்வைத்துள்ள அர்த்தமற்ற புகாரால் என் தந்தை அவரை நினைத்து வருத்தப்படவில்லை. எங்களை நினைத்தும் எங்கள் மனநிலையை நினைத்தும்தான் வருந்துகிறார். பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை. ஸ்ருதி அதைப் பயன்படுத்துவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும். ஒரு பெண்ணாக # MeToo என்னும் இயக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் ஸ்ருதி போன்றவர்கள் பப்ளிசிட்டிக்காகச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ருதிக்கு எதிராக என் தந்தை சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்வார்’ என்று பேசியுள்ளார்.