வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (23/10/2018)

கடைசி தொடர்பு:20:14 (23/10/2018)

ராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்!

இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவின் பயோபிக்கில் ஷாருக் கான் நடிக்கிறார்.  

ஷாரூக் கான்


ரஷ்ய விண்வெளி ஆய்வின்மூலம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற புகழை எட்டியவர் ராகேஷ் ஷர்மா. இவரது வாழ்க்கையை பயோ-பிக்காக நடிக்கிறார் பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாருக். இப்படத்துக்கு 'சல்யூட்' எனப் பெயர் வைக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், படத்துக்கு `சாரே ஜஹான்சே அச்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, ஷாருக் நடித்துவரும் `ஜீரோ' திரைப்படத்தை இயக்கிய ஆனந்த். எல்.ராய்தான் இந்த விண்வெளிப் படத்தையும் இயக்க உள்ளார். அடுத்த மாதத்திலிருந்து, இதற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாக உள்ளது. படத்தில், ஷாருக் கானுக்கு ஜோடியாக பூமி பெட்னெகர் நடிக்கவிருக்கிறார்.  

ராகேஷ் ஷர்மா

ஹாலிவுட்டைப் போல இந்தியாவிலும் விண்வெளிப் படங்கள் மெள்ள வரத் தொடங்கியுள்ளன. தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 'டிக் டிக் டிக்' என்ற விண்வெளிப் படமும், இந்தியில் மாதவன் மற்றும் 'தோனி' புகழ் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் 'சந்தா மாமா தூர் கே, தெலுங்கில் வருண் தேஜ் நடிப்பில் 'அந்தராக்‌ஷ்யம் 9000KM/HR' உள்ளிட்ட  படமும் தயாராகிவருகின்றன. 


ராகேஷ் தற்போது

ராகேஷ் ஷர்மா தற்போது,  குன்னூரில் தனது ஓய்வுக் காலத்தைக் கழித்துவருவது குறிப்பிடத்தக்கது.