Published:Updated:

`அன்று நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்கக் கூடாது!’ - #MeToo குறித்து நிவேதா பெத்துராஜ்

`அன்று நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்கக் கூடாது!’ - #MeToo குறித்து நிவேதா பெத்துராஜ்
`அன்று நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்கக் கூடாது!’ - #MeToo குறித்து நிவேதா பெத்துராஜ்

`பாலியல் தொல்லை பிரச்னையை நானும் சந்தித்துள்ளேன். பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை’ என நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்

மீடூ இயக்கம் சினிமா துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து, இந்த இயக்கம் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர். மீடூ மூலம் புகார்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சினிமாவில் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக, நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிக்கும் `திமிரு புடிச்சவன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ், ``மீடூ பிரச்னையில் நானும் சிக்கியிருக்கிறேன். ஒரு பார்ட்டிக்கு சென்றபோது அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும் மதுரையைப் பூர்வீமாக கொண்ட தமிழ்ப் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என்மீது தான். நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்கக் கூடாது.

போகாமலிருந்திருந்தால், அந்த கசப்பான அனுபவத்தைத் தவிர்த்திருக்கலாம். பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் அந்த இடத்திலே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இப்போது, அதுபோல சம்பவம் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன்.

`திமிரு புடிச்சவன்’ படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன். முதலில் மோசமான போலீஸ் அதிகாரியாக இருந்து பின் நல்லவராக மாறும் கேரக்டர் அது.  இந்தக் கதாபாத்திரத்துக்காக புல்லட் ஓட்டப் பயிற்சி பெற்றேன். இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும்” என்றார்.