'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' - விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் நடிக்கும் மாதவன்! | madhavan will act in isro scientist nambi narayanan

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (29/10/2018)

கடைசி தொடர்பு:20:20 (29/10/2018)

'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' - விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் நடிக்கும் மாதவன்!

இஸ்ரோவில், விஞ்ஞானிகள் பலரும் திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் ஆய்வுசெய்தபோது, திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன்.  

நம்பி நாராயணன்

அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, அவர்மீது கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.  சி.பி.ஐ நடத்திய விசாரணையில், இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, தனது தொழில் திறமையை முடக்கும் வகையிலும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட காவல் துறை உயரதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்குமாறும், நஷ்டஈடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

நம்பி நாராயணன்

இந்த வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரை நேரில் சந்தித்த கேரளா முதல்வா் பினராயி விஜயன் அவரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.  தற்போது, இவரின் கதையை 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படமாக்க இருக்கின்றனர். அதை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அதில், நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். அப்படத்தின் அறிவிப்பை வீடியோ மூலமாகத் தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார், மாதவன். அதற்கு, திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இப்படத்தின் டீஸர், வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவிருக்கிறது. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க