``எங்க டீமுக்குள்ள சண்டையா... அதெல்லாம் இல்லை ப்ரோ..!’’ - `மைக்செட்’ ஸ்ரீராம் | Mic set youtube channel sriram speaks about sothanaigal channel

வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (30/10/2018)

கடைசி தொடர்பு:16:03 (30/10/2018)

``எங்க டீமுக்குள்ள சண்டையா... அதெல்லாம் இல்லை ப்ரோ..!’’ - `மைக்செட்’ ஸ்ரீராம்

சினிமா, சின்னத்திரைபோல யூடியூப்பிலும் ஒரு தனி ராஜ்ஜியமே நடக்கிறது. கருத்து பேசுவதற்கு சில சேனல்கள், காமெடி பண்ணுவதற்கு சில சேனல்கள், ப்ராங் வீடியோ பண்ணுவதற்கு சில சேனல்கள் எனப் பல சேனல்கள் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸாக இருக்கின்றன. அப்படி காமெடிக்கு ஃபேமஸாக இருக்கும் ஒரு சேனல்தான் 'மைக்செட்'. பாண்டிச்சேரி பசங்களால் நடத்தப்படும் இந்தச் சேனலின் பல ’சோதனைகள்’ வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கத் தவறுவதில்லை.

மைக்செட்

30, 40 நபர்கள் எனப் பெரிய அளவில் இயங்கும் சேனல்களுக்கு மத்தியில் சில நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு சக்ஸஸ்ஃபுல்லாக இயங்கி வந்த சேனலில், ஏதோ ஒரு விரிசல் ஏற்பட்டிருக்கிறது எனத் தகவல்கள் வருகின்றன. மைக்செட் சேனலில் இருந்த ஸ்ரீராமைத் தவிர மற்ற அனைவரும் சேர்ந்து சோதனைகள் என்கிற பெயரில் ஒரு புதிய சேனலை ஆரம்பித்து அதில் சில வீடியோக்களையும் பதிவிட்டிருக்கிறார்கள். 

ஸ்ரீராம்

என்ன பாஸ் உங்களுக்குள்ள சண்டையா என  ’மைக்செட்’ சேனல் ஸ்ரீராமிடம் கேட்டதற்கு, ``எங்க டீமுக்குள்ள சண்டையா; அதெல்லாம் இல்லை ப்ரோ. மைக்செட்ல போடுற சோதனைகள் வீடியோ எல்லாம் நல்லா ஹிட்டாகுது. ஆனால், ரீச் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லை. அதனால இன்னொரு சேனலை ஆரம்பிச்சு, அதை டெவலப் பண்ணலாம்னு நாங்க எல்லாரும் சேர்ந்து முடிவு எடுத்தோம். ’புது சேனலில் நீங்க எல்லோரும் வீடியோ பண்ணுங்க. நான் மைக்செட்ல பண்றேன்’னு நான் சொன்னதும், எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க. ரெண்டு சேனலுக்கும் எல்லாரும் சேர்ந்துதான் ஸ்கிரிப்ட் எழுதுறோம். நிறைய பேர் கமென்ட்ல, ’உங்களுக்குள்ள சண்டையா’னுதான் கேட்குறாங்க. அதெல்லாம் இல்லை பாஸ்; நாங்க ஜாலியாகத்தான் வேலை பார்த்துட்டு இருக்கோம்’’ என்றார்.