வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (30/10/2018)

கடைசி தொடர்பு:17:09 (30/10/2018)

`கதைக்கரு மட்டுமே சேம்; மற்றபடி சர்காருக்கு எல்லாம் நான்தான்’ - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

'சர்கார்' படம்குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விளக்கமளித்துள்ளார். படத்தின் கதைக்கரு மட்டும்தான் ஒற்றுமையே தவிர, மற்றபடி இது தன்னுடைய உழைப்புதான் என அவர் விளக்கமளித்துள்ளார்.

 முருகதாஸ்

'சர்கார்' படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரிடையே சமரச முடிவு எட்டப்பட்டதால்,  வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சர்கார் படத்தில் வருண் ராஜேந்திரன் பெயரை போட படக்குழு ஒப்புக்கொண்டது. இந்நிலையில், சர்ச்சை தொடர்பாகத் தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அப்படத்தின் இயக்குநர் முருகதாஸ், ``பாக்யராஜ் அவர்கள் என்னை அழைத்து இப்படி ஒரு பிரச்னை போயிட்டு இருக்கு.

அறிக்கை

ஒருத்தனுடைய ஓட்டை கள்ள ஓட்டாகப் போட்டுள்ளனர் என்பதுதான் படத்தின் கரு. அந்த ஸ்பார்க் மட்டும்தான் ஒற்றுமை. மற்றபடி இந்த கதைக்கும் அந்தக் கதைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. ஆனால், நமக்கு முன்னாடி ஒரு அஸிடன்ட் ரெஜிஸ்டர் பண்ணிருக்காரு என்பதால், அவரைப் பாராட்டி  ஊக்குவிக்கும் வகையில் ஒரு கார்டு போடச் சொன்னாங்க.'' சரினு நான் ஒத்துக்கொண்டேன். மத்தபடி, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் ஏ.ஆர்.முருகதாஸ் தான். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஹேப்பி தீபாவளி” என்று தெரிவித்துள்ளார்.