முதல் காதல்; எழுத்தாளர் ஆசை; ரொம்ப க்ளோஸ் யாரு? - மேகா ஆகாஷின் ஜாலி பேட்டி! | actress megha akash interview

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (30/10/2018)

கடைசி தொடர்பு:19:44 (30/10/2018)

முதல் காதல்; எழுத்தாளர் ஆசை; ரொம்ப க்ளோஸ் யாரு? - மேகா ஆகாஷின் ஜாலி பேட்டி!

`என்னை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் விகடனுக்குக் கொடுத்த பேட்டி நாளை ஒளிபரப்பாகிறது. தன் வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். 

 மேகா ஆகாஷ்

இவரது எழுத்து ஆர்வத்தைப் பார்த்து, வீட்டில் இவரை எழுத்தாளர் ஆவார் என்று  நினைத்தார்களாம். ஆனால், தொடர்ந்து கதவைத் தட்டிய சினிமா வாய்ப்புகளால் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார் மேகா ஆகாஷ்.  
மேகா, நடிக்க வர்றதுக்கு முன் கொஞ்சம் குண்டா இருந்திருக்கிறார். எடைக் குறைக்கச் சொல்லி நிறைய அறிவுரைகளால் டயட் இருந்து உடற்பயிற்சி செய்து உடம்பைக் குறைத்த பர்சனல் பக்கங்கள் முதல் அவர் குடும்பம் காதல் முதல் பலவற்றையும் பகிர்கிறார். நடிப்புக்காக மேகா மாற்றிக்கொண்ட விஷயங்கள் எது?

தனுஷுடன் நடித்த மறக்க முடியாத காட்சி, ஸ்கூபா டைவிங் அனுபவம்? மேகா ஆகாஷ்  யாருக்கு ரொம்ப க்ளோஸ்? போன்ற பல விஷயங்களை சுவாரசியமாகச் சொல்லியிருகிறார். மேலும் 'எமோஜி' எக்ஸ்பிரசன்ஸை முகத்தில் காட்டி ஜாலி செய்தவர், 'மறுவார்த்தை பேசாதே...' பாடலையும் பாடி சர்பரைஸ் கொடுத்திருக்கிறார். நாளை (31.10.2018) காலை 11 மணிக்கு மேகா ஆகாஷின் முழு பேட்டி சினிமா விகடன் யூட்யூப்பில். பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க சினிமா விகடன் யூட்யூப் சேனலை உடனே சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க ஃப்ரெண்ட்ஸ்!