வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (30/10/2018)

கடைசி தொடர்பு:19:42 (30/10/2018)

`தப்புனு தெரிஞ்சா டப்புனு அடிக்கணும்’ - கெளதம் கார்த்திக்கின் தேவராட்டம் டீசர்!

`கொம்பன்', 'குட்டிப்புலி', 'மருது', 'கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கி இருக்கும் படம் 'தேவராட்டம்'. 'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்துக்குப் பிறகு, நடிகர் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

தேவராட்டம்

தவிர, சூரி, சீரியல் நடிகர் முனீஸ்ராஜா நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கெளதம் கார்த்திக் இப்படத்தில் முதன்முதலாக 'நவரச இளவரசன்' என்ற அடைமொழியுடன் நடிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், கெளதம் கார்த்திக். இந்தப் படத்துக்குப் பிறகு, கன்னடத்தில் ஷிவ்ராஜ்குமார் நடித்து ஹிட்டான 'டகரு' படத்தைத் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் இயக்குநர் முத்தையா.  

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க