வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:22:00 (30/10/2018)

ஊர்ல `தல’ காட்ட முடில - பில்லா பாண்டி டிரெய்லர் வெளியீடு!

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் `பில்லா பாண்டி’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

பில்லா பாண்டி

`என் ஊரு என் மண்ணு; என் `தல’ய தவிர எவனுக்கும் தல வணங்க மாட்டேன் என்ற வசனத்துடனும், தல ரசிகர்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் என்றபடி முடிகிறது படத்தின் டிரெய்லர். ராஜ்சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் தீபாவளியன்று சர்காருடன் போட்டி போட திரைக்கு வருகிறது `பில்லா பாண்டி’ திரைப்படம்.

படத்தின் நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் படத்தைத் தயாரித்துள்ளார். மேலும் `மேயாத மான்’ படத்தில் நடித்த இந்துஜா, தம்பி ராமையா, விதார்த், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையவன் இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ராஜா முகமது எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் அஜித் ரசிகராக, வலம் வருகிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு அஜித் திரைப்படம் வெளிவராமலிருந்த நிலையில் ரசிகர்களின் கவலையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் படம் அமையும் எனத் தெரிகிறது.