வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (31/10/2018)

கடைசி தொடர்பு:11:56 (31/10/2018)

``நான் 'தனி ஒருத்தன்'தான்... ஆனா, பப்ளிக்..." - ஜெயம் ரவியின் 'அடங்க மறு' டிரெய்லர் !

'டிக் டிக் டிக்' படத்துக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் 'அடங்க மறு'. இந்தப் படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார், கார்த்திக் தங்கவேல். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்த ராஷி கண்ணா இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அடங்கமறு

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் துன்புறுத்துல்களை வைத்துதான் கதை எழுதியிருக்கிறார், இயக்குநர். சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். 'தீரன்' படத்தின் ஒளிப்பதிவாளர், சத்ய சூரியன்தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், பொன்வண்ணன், சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை பூர்ணா கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். நவம்பர் மாதம் படம் திரைக்கு வரவிருக்கிறது.