வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (31/10/2018)

கடைசி தொடர்பு:21:25 (31/10/2018)

 `மெட்ராஸ்' ஜானியின் சினிமா பயணம்... காதல் கதை... தீபாவளி எக்ஸ்க்ளூசிவ்!

மெட்ராஸ் ஜானி

`மெட்ராஸ்’ பட ஷூட்டிங் சமயத்தில் ஹரி, அதுதாங்க நம்ம 'மெட்ராஸ்' ஜானி. அந்தக் கெட்டப்புலயே அவர் வீட்டு வாசலில் போய் நின்று இருக்கிறார். யாரோ என்று நினைத்துப் பயந்த இவரின் அம்மா விஜய சங்கரி இவரை ‘ஏய் அங்கிட்டுப் போ’னு துரத்திவிட்டிருக்கிறார். ‘நான்தான்மா உங்க பையன் ஹரி’ என்று சொல்லி சிரித்தவர், இவருடன் நடித்த நடிக்கிறவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். 

 

 

``எங்க அம்மாவுக்காவது நான் 'மெட்ராஸ்' படத்தில் நடிக்கிறது தெரியும். எங்க அப்பாவுக்கு அதுவும் தெரியாது" என்கிறார் ஹரி. 

``மெட்ராஸ் படம் வெளிவந்த பிறகுதான், இவன் நடிக்கிறான் என்ற விஷயமே எனக்குத் தெரியும். நான் ஆபீஸ் போறதால சீக்கிரமே தூங்கிடுவேன். அவன் நைட் லேட்டாதான் வருவான். படம் பார்த்துத்தான் இவன் நடிச்சு இருக்கான் என்ற விஷயமே எனக்குத் தெரிந்தது" என மகனின் தோள் தட்டிச் சிரிக்கிறார் அவரின் அப்பா அன்புதுரை. இப்படி தான் சினிமாவுக்கு நடிக்க வந்த அனுபவம். மனைவி உஷாவை கரம் பிடித்த காதல் கதை.ஹரியின் மகனுக்கு இயக்குநர் ரஞ்சித் பெயர் வைத்த சம்பவம் என பலவற்றையும் தன் குடும்பத்தினருடன் பகிர்கிறார் நம்ம 'மெட்ராஸ்' ஜானி. இன்று (31.10.2018) மாலை 5 மணிக்கு ஹரியின் முழு பேட்டியை சினிமா விகடன் யூடியூபில் மிஸ் செய்யாமல் பார்க்க சினிமா விகடன் யூடியூப் சேனலை இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க மக்களே...