`ராக்கெட்ரில 35 வருஷம்; ஜெயில்ல 50 நாள்' - மாதவனின் `ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' டீசர்! | Madhavan 's Rocketry The Nambi Effect teaser out

வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (31/10/2018)

கடைசி தொடர்பு:17:12 (31/10/2018)

`ராக்கெட்ரில 35 வருஷம்; ஜெயில்ல 50 நாள்' - மாதவனின் `ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' டீசர்!

விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக் படமான 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' டீசர் வெளியாகியுள்ளது. 

மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பலரும் திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் ஆய்வுசெய்தபோது, திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான பங்காற்றியவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். இப்படி வலம் வந்தவர் மீது அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, கடந்த 1994-ல் வழக்கு தொடரப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து 50 நாள்கள் அவர் சிறையில் இருந்தார். ஆனால், அதன்பின் நடந்த சி.பி.ஐ விசாரணையில், நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் தெரியவந்தது. 

இதையடுத்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர், தன் மீது பொய் வழக்கு போட்ட கேரள அரசு மீது மான நஷ்ட வழக்கு தொடுத்தார். அதிலும் வெற்றிகண்ட அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறையில் அவர் அனுபவித்த இன்னல்கள், அவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவர இருக்கிறது. 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்றப் பெயரில் உருவாகிவரும் இந்தப் பயோ பிக்கில் நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படமாகும் இதை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க