வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (31/10/2018)

கடைசி தொடர்பு:19:30 (31/10/2018)

கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு'

'தரமணி' படத்துக்குப் பிறகு, இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், 'பேரன்பு'. இதில் மம்மூட்டி, அஞ்சலி, 'தங்கமீன்கள்' சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

பேரன்பு

இந்நிலையில், நவம்பர் 20 - 28-ம் தேதி கோவாவில் நடக்கும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. அதில், 'பேரன்பு' படத்துக்கு, வரும் நவம்பர் 25-ம் தேதி இரவு 8.30 மணி ஸ்லாட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 'பராசக்தி' மற்றும் 'மாம்' ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க