வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (31/10/2018)

கடைசி தொடர்பு:21:10 (31/10/2018)

காதல்... முதல் திருட்டு... சீரியல்... - ப்ரியா பவானி சங்கர் ஷேரிங்க்ஸ்!

“ஜீ தமிழ், பொதிகை, ஜெயா டிவினு சில மீடியா சேனல்களில் வேலை பார்த்துட்டே காலேஜ் படிச்சு முடிச்சிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். பிறகு பெங்களூருவில் இன்ஃபோசிஸ்ல வேலை. கொஞ்சநாள் மட்டுமே அங்க இருந்தவர்க்கு, 'மீடியாதான் எனக்கான இடம்'னு போகப்போகத்தான் தெரிய வந்திருக்கு. உடனே வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னை வந்து என்டிடி, தி ஹிந்து தமிழில் கொஞ்ச நாள்கள் வேலைப் பார்த்து இருக்கிறார். பிறகுதான் புதிய தலைமுறை நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராகி பலரின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார். 

பவானி சங்கர்

 

செய்தி வாசிப்பாளரா இருக்கும்போதே நிறைய நாடகங்கள்ல நடிக்கும் வாய்ப்புகள் வர அதை தவிர்த்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் நம்ம முயற்சி பண்ணிதான் பார்ப்போமேனு விஜய் டிவி-யின் கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் கதையைக் கேட்டிருக்கிறார். அது இந்தியில் பிரபலமான ஒரு சீரியலோட ரீமேக். அந்த இந்தி சீரியலை பார்த்த பிரியாவுக்கு பிடித்துப்போகவே சீரியலில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். தான் நடித்த சீரியல், நாடகங்களை வீட்டில் எல்லோர்கூடவும் உட்கார்ந்து பார்க்கவே மாட்டாராம் இவர். கலகலனு சினிமா வாய்ப்புகள் பற்றி பேசியிருக்கும் ப்ரியாபவானி சங்கர் 'எட்டு தோட்டாக்கள்' பட இயக்குநர் கணேஷ், 'குருதி ஆட்டம்' படக் கதையை முதலில் இவர்கிட்ட சொன்னப்போ அதைத் தவிர்த்திருக்கிறார். அதற்கான காரணத்தையும், முதல் முறையாகத் திருடிய அனுபவம். சைட் அடித்த அனுபவம் எனப் பழைய ஃப்ளாஷ் பேக் காட்சிகளை நமக்காக ரீவைண்ட் பண்ணி நமக்கான சினிமா விகடன் யூடியூப் சேனலில் சொல்லியிருக்கிறார். நாளை வெளியாகும் இந்த வீடியோவை மிஸ் செய்யாமல் பார்த்து மகிழுங்கள். அதைவிட முக்கியமா உடனே சினிமா விகடன் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.