வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (02/11/2018)

கடைசி தொடர்பு:11:38 (02/11/2018)

`குறும்பு தாதா இஸ் பேக்!’- தெறிக்கவிடும் மாரி-2 ஃபர்ஸ்ட் லுக்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

மாரி

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிடப்பட்டது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே இரண்டாவது பாகத்தையும் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டு, அதன் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்தது. `மாரி -2' படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதிலாக சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இவரைத்தவிர வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். 

`வடசென்னை' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து தற்போது `மாரி-2' படத்தில் கவனம் செலுத்திவருகிறார் நடிகர் தனுஷ். இந்த நிலையில், தற்போது `மாரி-2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் பட்டாசுடன் தெறிக்கவிட்டிருக்கிறது `மாரி-2' போஸ்டர். மேலும், இந்தப் படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தன் ட்விட்டர் பக்கத்தில்  'மீண்டும் வந்துவிட்டார் குறும்பு தாதா' என்ற கேப்சனுடன் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார் தனுஷ்.