வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:14:00 (02/11/2018)

ரஜினியின் 2.0 டிரெய்லர் நாளை வெளியீடு! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ரஜினிகாந்த்- இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் பிரமாண்ட படைப்பாக உருவாகி வரும் `2.0' படத்தின் டிரெய்லர் நாளை ( 03/11/2018) வெளியாக உள்ளது.

ரஜினி படம் என்றாலே அவரது ரசிகர்களைத் தாண்டி பல மட்டங்களிலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த குறியீடு எதுவும் படத்தில் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பே.

ரஜினி

அதிலும் `எந்திரன்' மிகப் பெரிய வெற்றி பெற்றதால், 2.0 அதன் `பார்ட் 2' என்றே ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருப்பதால் படத்தின் டிரெய்லர் வெளியீடு ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. இணையத்தில் டிரெய்லர் வெளியாகும் நவம்பர் 3 அன்றே சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் பிரத்யேகமாகப் படத்தின் சில பாடல்களையும் வெளியிட இருக்கிறது படக்குழு.

இன்னொரு முக்கியமான விஷயம், படத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுவிதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். அந்த டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு விளக்க இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் செல்போன்கள் பறக்கிற காட்சிகளுடன் வெளியான படத்தின் டீசரே செமயாக வைரலானது நினைவிருக்கலாம்.

செல்போன் பறக்கிற அந்தக் காட்சிகளெல்லாம் புதுவிதமான சவுண்டு சிஸ்டத்தில் தெறிக்க விடலாம் என்பதால் அந்த அனுபவத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.