வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (02/11/2018)

கடைசி தொடர்பு:15:16 (02/11/2018)

இளமைப் பருவ ஃப்ளாஷ்பேக் பகிரும் அமித் - ஸ்ரீரஞ்சனி!

'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் அமித் பார்கவுக்கு போலீஸ் கேடக்டர். அதே சேனலில் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார் ஸ்ரீரஞ்சனி. தற்போது, 'Dog House Diaries' எனும் வெப் சீரிஸில் இருவருமே பிஸி. 

இருவரும் தங்களின் இளமைப் பருவ ஃப்ளாஷ்பேக்கை நினைவுகூர்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கின்றனர். பிறகு, அவர்களுக்குள்ளான காதலைப் பற்றி கேட்டவுடன், கூத்துப்பட்டறையில் அறிமுகமானது, தங்களுக்குள் காதல் மலர்ந்தது என வெட்கப் புன்னகையோடு பேச ஆரம்பிக்கின்றனர் அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி தம்பதி. 

'சின்னா, பாப்பா' என அமித்துக்கு தான் வைத்த செல்லப் பெயர்களையும் வீட்ல அமித் எப்படி என தனக்கான காதலுடன் பகிர்ந்துகொள்கிறார் ஸ்ரீரஞ்சனி. 'நானும்தான் செல்ல பேர் வெச்சிருக்கேன்' என தன் மனைவிக்கு வைத்த பெயர்களைப் பட்டியலிடுகிறார், அமித்.      

அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி காதல் தம்பதியின் பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க... உடனே சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. நாளை ( 3.11.2018) மாலை 5.00 மணிக்கு டான்னு நாங்களே உங்களைத் தேடி வந்துடுவோம்.