வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (02/11/2018)

கடைசி தொடர்பு:19:27 (02/11/2018)

'ஆத்தீஷைக் கூப்பிட்டது ஆச்சர்யம்தான்!' - ஜோடி ஷோ குறித்து ஜட்டி ஜகநாதனின் அம்மா

ஆத்தீஷ்

விஜய் டி.வி-யின் 'கிங்ஸ் ஆஃப் காமெடி' சீசன் -1 ல் அசத்தியவர் ஆத்தீஷ். ஆத்தீஷா... யாரதுன்னு யோசிக்கிறீர்களா. ஜட்டி ஜகநாதன்னு சொன்னால் உடனே நினைவுக்கு வந்துவிடுகிறதா. அலாவுதீன் பூதமாக வந்து, வயிறு வலிக்குமளவு சிரிக்கவைத்தது முதல், பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, நடுவர்களின் விருப்பமான போட்டியாளராகிவிட்டார் ஆத்தீஷ். சமீபத்தில், 'ஜோடி' எனும் நடன நிகழ்ச்சியில், உத்ராவோடு சேர்ந்து டான்ஸ் ஆடப்போகிறார் என்ற விளம்பரம் எல்லோரையும் கவர்ந்துவருகிறது.

ஜட்டி ஜகநாதன்

அதுகுறித்து, ஆத்தீஷின் அம்மா வசந்தியிடம் கேட்டோம். "ஆத்தீஷ், எப்போவும் துறுதுறுன்னு இருப்பான். 'இரும்புத்திரை', 'மணியார் குடும்பம்' எனப் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. இன்னும் சில படங்களில் நடிக்க கேட்டுட்டு இருக்காங்க. படிப்பு ரொம்ப முக்கியம் இல்லையா. அதனால, ஸ்கூலுக்கு ரெகுலராக அனுப்பறதுக்குப் பார்ப்பேன். ஒருநாள் திடீர்னு விஜய் டி.வி-யிலேருந்து டான்ஸ் ஷோவில் ஆத்தீஷை டான்ஸ் ஆடவைக்க முடியுமான்னு கேட்டாங்க. உடனே, 'சரி'னு ஒத்துக்கிட்டேன். ஏன்னா, இவனுக்கு டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். வீட்டுல இருக்கும்போதும், ஷூட்டிங் இடைவெளியிலேயும் ஆடிட்டே இருப்பான். அதனால, இந்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திப்பான். இவனோடு ஆடுற உத்ராவும் ஏற்கெனவே நல்ல ஃப்ரெண்ட்ஸ். அதனால, ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிறாங்க. இவன் டான்ஸைப் பார்த்துட்டு, முறைப்படி கிளாஸுக்கு அனுப்பலாமேனு சொல்றாங்க. நேரம்தான் கிடைக்க மாட்டேங்குது" என்றவாறு சிரிக்கிறார்.