வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (02/11/2018)

கடைசி தொடர்பு:19:35 (02/11/2018)

`அப்பு’ கமலுக்கு சவாலா இந்த ஷாருக்? - `ஜீரோ’ ட்ரெய்லர்

ஷாருக் கான் - அனுஷ்கா சர்மா இணைந்து நடித்துள்ள `ஜீரோ’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

ஜீரோ

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஷாருக் கான், கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம்தான், `ஜீரோ’. வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இத்திரைப்படம், பாலிவுட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து காத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவுக்கு படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உள்ளன. ஆம், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்தத் திரைப்படத்தில் சல்மான் கான், கஜோல், ராணி முகர்ஜி, அலியா பட், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஷாருக் கானுடன் இணைந்து நடித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் படத்தின் இன்னொரு ஹைலைட், ஷாருக் கானின் கேரக்டர். 

ஷாருக், இந்தப் படத்தில் வளர்ச்சிக் குறைபாடுடைய (dwarf) மனிதராக நடித்துள்ளார். சல்மான் கான், படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகவே தோன்றுகிறார்.  கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாக உள்ள படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே வெளியான டீசரில், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் இருவரும் ஒன்றாகத் தோன்றினர். தற்போது வெளியாகியுள்ள டிரைலரில், ஷாருக் - அனுஷ்கா சர்மா - கத்ரீனா கைப் இடையேயான காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, இசை என படத்தின் `ஜீரோ’ டிரெய்லர் மிரட்டுகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க