வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (02/11/2018)

கடைசி தொடர்பு:19:54 (02/11/2018)

கச்சேரி முதல் சூப்பர் சிங்கர்' சீசன் 6 வரை... ஃப்ளாஷ்பேக் பகிரும் செந்தில் கணேஷ் -  ராஜலட்சுமி!

மக்களிசைப் பாடகர்கள் செந்தில் கணேஷ் -  ராஜலட்சுமி தம்பதி, தங்களின் இசைப் பயணம் முதல் இன்று வரும் சினிமா வாய்ப்புகள் வரை பல விஷயங்களைத் தங்களின் அடையாளமான நாட்டுப்புறப் பாடல்களுடன் உரையாடுகின்றனர், சினிமா  விகடன் யூடியூப் சேனலில். 

ராஜலட்சுமி

"புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என் ஊர். வானம் பார்த்த பூமி. விவசாயம் செய்ய நீர்ப்பாசனம் பெரிய அளவில் இல்லை. சுத்தி இருக்கிற தைல மரங்கள், இருக்கின்ற கொஞ்சநஞ்ச நிலத்தடி நீரையும் உறிஞ்சிக்கொள்ளும். மழைக்காலம் தவிர, மற்ற காலங்களில் எங்கள் ஊரில் வறட்சிதான். அதனால், ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குத்தான் செல்வார்கள். அங்கே, களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதுண்டு'' -  என பாடலுக்குப் பின்னால் இருக்கும் ஃப்ளாஷ்பேக் கதையிலிருந்து தொடங்கி, `சூப்பர் சிங்கர்' சீஸன் 6 பயணம், சினிமா வாய்ப்பு, தான் நடித்தது என அனைத்தையும் அவரது மனைவி ராஜலட்சுமியுடன் உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

இவர்களது எவர் கிரீன் பாடலான "ஆஹ்... ஆஹ்... ஆஹ்... 
சின்ன மச்சான், 
என்ன புள்ள

செவத்த மச்சான், 
சொல்லு புள்ள..." போன்ற பாடல்களையும் பாடி ஜாலி செய்கிறார்கள்.

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியின் பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க, உடனே சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. நாளை (03.11.2018) காலை 11.00 மணிக்கு டான்னு உங்களுக்கு  நாங்களே உங்களைத் தேடி வந்துடுவோம்.