வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:16:42 (03/11/2018)

`காதல் டு கல்யாணம்’ - மனம் திறக்கிறார் ரமேஷ் திலக்!

தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் நடிகர் ரமேஷ் திலக். சினிமா விகடனுக்கு அவர் கொடுத்த பேட்டியை நாளை யூடியூபில் காணுங்கள்.

ரமேஷ் திலக்

காதல் டு கல்யாண சுவாரஸ்யம் சொல்கிறார்கள் ரமேஷ் திலக் - நவலஷ்மி. இருவருமே சூரியன் எஃப்.எம்-யில் ஆர்.ஜேவாக இருந்து காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். ரமேஷ் இன்று பரபரப்பான நகைச்சுவை நடிகர். நவலஷ்மி ஆர்.ஜே ப்ளஸ் கோரியோகிராபர்.  எஃப்.எம்-ல நவலஷ்மியைவிட ரமேஷ் சீனியராம். அந்த சீனியாரிட்டியை மனசுல வைத்து நவாவை புரொடியூசர்ட்ட போட்டுவிட்ட ஜாலி சம்பவங்கள்... இருவரும் பிரபல இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் படங்களில் பணிபுரிந்த அனுபவம்... ரமேஷ் திலக், விஜய் சேதுபதிக்குமான நட்பு... தலை தீபாவளி கொண்டாட போட்டுருக்கும் பிளான் எனப் பலவற்றையும் உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கின்றனர், சினிமா விகடன் யூடியூப் சேனலில். ரமேஷ் திலக் - நவலஷ்மி ஜோடியின் பேட்டி இன்று (03.11.2018) மாலை 5.00 மணிக்கு Cinema Vikatan youtube சேனலில். மறக்காம இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க ஃப்ரெண்ட்ஸ்.