சந்தோஷ் நாராயணனுடன் ஒரு நேர்காணல்! | Santhosh narayanan interview

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (03/11/2018)

கடைசி தொடர்பு:18:18 (03/11/2018)

சந்தோஷ் நாராயணனுடன் ஒரு நேர்காணல்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சினிமா விகடனுக்கு அளித்த நேர்காணல் நாளை 11 மணி அளவில் ஒளிப்பரப்பாகிறது.

சந்தோஷ் நாராயணன்

 

மெலடியில் கரைய வைப்பார். கானாவில் தெறிக்கவிடுவார். நாட்டார் இசையிலும் புழுதி பறக்கும். எந்த ஜானரிலும் இறங்கி அடிப்பது சந்தோஷ் நாராயணன் ஸ்டைல். அவருடைய வாழ்க்கைப் பயணம், இசைப் பயணம் பற்றி உரையாட சந்தோஷ் நாராயணன் - மீனாட்சி தம்பதியைச் சந்தித்தோம். `உங்க மனைவிக்கு என்ன பாட்டை டெடிகேட் பண்ணுவீங்க' என்றவுடன், 'வேற என்ன? 'தங்க சிலை.. சாங்தான்' என்ற இன்ஸ்டன்ட் பதில் சந்தோஷிடமிருந்து வருகிறது. ``கண்ணம்மா, மாயநதி... இந்த ரெண்டு பாட்டும் என் மனசுக்கு ரொம்பப் பிடிக்கும். இது எல்லாத்தையும்விட `உயிர்மொழி' படத்துல வந்த 'ஒரு முறை' பாடல் எங்க ரெண்டுபேருக்குமே ஆல் டைம் ஃபேவரைட்’’ என்று புன்னகைக்கிறார் மீனாட்சி. தினமும் விளையாடும் கிரிக்கெட் முதலனெப்போதும் விரும்பாத க்ளீன் ஷேவ் வரை பல விஷயங்களை சுவாரஸ்யமாகப் பகிந்துள்ளனர் சந்தோஷ் நாராயணன் - மீனாட்சி தம்பதி. சந்தோஷ் நாராயணன் ஃபேமிலி பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க... உடனே சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. நாளை (4.11.2018) காலை 11.00 மணிக்கு டான்னு நாங்களே உங்களைத் தேடி வந்துடுவோம்.