வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:20:30 (03/11/2018)

2.0 டிரெய்லர் சொல்லும் 'கொலைகாரர்கள்' உலகில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? #VikatanInfographics

2.0 ட்ரைலர் காட்சியில் ஸ்மார்ட்போன்களால் மனித வடிவில் மாறும் அக்ஷய் குமார், "செல்போன் வெச்சிருக்க ஒவ்வொருத்தரும் கொலைகாரங்க!" என்கிறார்.

2.0 டிரெய்லர் சொல்லும் 'கொலைகாரர்கள்' உலகில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? #VikatanInfographics

பல நாள்கள் காத்திருப்பிற்குப் பிறகு, மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி, பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது '2.0' திரைப்படத்தின் டிரெய்லர்.இயக்குநர் ஷங்கர் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

2.0 டிரெய்லர்

டீசரில் வந்தது போலவே, டிரெய்லரிலும் செல்போன்கள் மக்களின் கைகளில் இருந்து பறக்கின்றன. அவை ஒன்றிணைந்து, வில்லனாக நடிக்கும், அக்ஷய் குமாரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராட்சத பறவையோடு சேர்ந்து கொள்கின்றன. அந்தப் பறவையின் உடல் முழுவதுமே செல்போன்களால் உருவாகியிருக்கிறது. மக்களுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகும் இந்தப் பறவையை அழிக்க, மீண்டும் பாகங்கள் பிரிக்கப்பட்டு, மியூசியத்தில் வைக்கப்பட்ட 'சிட்டி' ரோபாட்டுக்கு உயிரூட்டி, மக்களைக் காப்பாற்றுவது போன்ற கதை தான் 2.0 என்பது டீசர், டிரெய்லர் மூலமாகத் தெரிகிறது. 

செல்போன்

டிரெய்லரில் "டெக்னாலஜி நம்மை இணைக்கிறது; நமக்காக வேலை செய்கிறது; இந்த ஆண்டு நம்மைக் குறிவைக்கும்" என்று சொல்லும்போதே, செல்போன்கள் அந்தரத்தில் பறந்துசெல்கின்றன. ஸ்மார்ட்போன்களால் மனித வடிவில் மாறும் அக்ஷய் குமார், "செல்போன் வெச்சிருக்க ஒவ்வொருத்தரும் கொலைகாரங்க!" என்கிறார். செல்போன்கள் ஒன்றிணைந்து ராட்சதப் பறவையாக, பெரிய அலையாக, சூறாவளியாக, மனித வடிவிலான ராணுவமாக, பெரிய அளவிலான அக்ஷய் குமாராக மாறுவதை ட்ரைலரில் காண முடிகின்றது.

உலகம் முழுவதும் ஏறத்தாழ 512 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். சுமார் 478 கோடி மொபைல் போன்கள் உலகம் முழுவதுமுள்ள மக்கள் கைகளில் செயல்பட்டு வருகின்றன. அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

வழக்கமாக ஷங்கர் படங்களில் பிரம்மாண்டமான தயாரிப்பில் சாதாரண சோசியல் மெசேஜ்கள் சொல்லப்படும்; இந்த முறை அவை செல்போன் பயன்படுத்துபவர்களுக்குச் சொல்லப்படும் என்பது டிரெய்லர் மூலம் உறுதியாகியுள்ளது.