வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (04/11/2018)

கடைசி தொடர்பு:13:17 (04/11/2018)

பிரபல சீரியல் நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்!

மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற சீரியலில் நடித்த நடிகர் விஜயராஜ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

விஜயராஜ்

திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ஒளிபரப்பாகி பெரும் ஹிட் அடித்த தொலைக்காட்சி தொடர் மெட்டி ஒலி. இந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் விஜயராஜ். இதுதவிர கோலங்கள், நாதஸ்வரம் போன்ற பிற சீரியல்களிலும் ஒருசில படங்களிலும் நகைச்சுவை நடிகராக இவர் நடித்துள்ளார். 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தன் சொந்த ஊரான பழனியில் கொண்டாடுவதற்காக தன் குடும்பத்தினருடன் இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு மரடைப்பு ஏற்பட்டுள்ளது.  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .அங்கு விஜயராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். விஜயராஜின் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.