Published:Updated:

மனுஷங்களுக்கும் புத்துணர்வு முகாம்!

கே.ராஜாதிருவேங்கடம்

##~##

''டான்ஸ் ரிகர்ஸல்ல இருக்கேன்... சொல்லுங்க!'' -  உற்சாகமாக சொர்ணமால்யா.

 ''இதெல்லாம் எனக்கு சரியா வரும்னா நினைக்கிறீங்க. ம்ம்ம்... விகடன்ல இருந்து கேட்கிறீங்க... முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன்!''- ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நம்ம ஊரு செய்தி அவ்வளவா தெரியாது. தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்!'' - போன் அடித்ததும் தயாரானார் 'நீயா... நானா’ இயக்குநர் ஆன்டனி.

''வணக்கம்... வசந்தகுமார்... கேள்விதானே... தாராளமாக் கேளுங்க!'' - இது வசந்த் அண்ட் கோ வசந்தகுமார்.

''ஒரு எமர்ஜென்ஸி கேஸ் அட்டென்ட் பண்ணிட் டுத் திரும்பிட்டு இருக்கேன். கேளுங்களேன். என்னதான் கேட்கிறீங்கன்னு பார்ப்போமே!'' - பாரதிய  ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் யார்?

விடை: பொன்.ராதாகிருஷ்ணன்

மனுஷங்களுக்கும் புத்துணர்வு முகாம்!

சொர்ணமால்யா: ''கண்ணதாசா இல்லே யேசுதாஸானு  'காவலன்’ படத்துல வர்ற வடிவேல் மாதிரி என்னைப் புலம்பவிட்டுட்டீங்களே... இல.கணேசனா இல்லே ராதாகிருஷ்ணனா?''

தமிழ்நதி: ''இதுக்கு எனக்கு விடை தெரியும். பொன்.ராதாகிருஷ்ணன்!''

ஆன்டனி: ''பொன்.ராதாகிருஷ்ணன் ஃப்ரம் கன்னியாகுமரி!''

வசந்தகுமார்: ''கன்னியாகுமரிக் காரரு ராதாகிருஷ்ணன்தானே!''

தமிழிசை சௌந்தர்ராஜன்: ''எங்ககிட்டேயேவா? பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக இருந்தாலும் ஒவ்வொரு தொண்டனுமே எங்கள் கட்சியில் தலைவர் தான்!''

2012 ஒலிம்பிக் போட்டிகள் எந்த நகரத்தில் நடக்கவிருக்கின்றன?

விடை:   லண்டன்

சொர்ணமால்யா: ''எங்க நடக்குது... எங்கயோ நடக்குதே? இங்கிலாந்துதானே?''  

தமிழ்நதி: ''லண்டன்லனு படிச்ச நினைவு. கன்ஃபார்மாத் தெரியலை!''

ஆன்டனி: ''மே பி... லண்டன்!''

வசந்தகுமார்: ''எங்கன்னு தெரியலை. நல்லபடியா நடக்க வாழ்த்துகள்!''

தமிழிசை சௌந்தர்ராஜன்: ''அடுத்த கேள்விக்குப் போயிரலாமா? ஒலிம்பிக் மேட்டரை பேப்பர்ல படிச்சேன். சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது!''

'தமிழகக் கோயில் யானைகளுக்காக தமிழக அரசு எங்கே, எத்தனை நாட்களுக்கு முகாம் நடத்துகிறது ?

விடை: முதுமலையில். 48 நாட்கள்.

மனுஷங்களுக்கும் புத்துணர்வு முகாம்!

சொர்ணமால்யா: ''யானைக்கு கேம்ப் நடத்துறாங்களா? சூப்பரான விஷயமா இருக்கே!''

தமிழ்நதி: ''ஊட்டி பக்கத்துல இருக்கிற முதுமலைக் காட்டுல!''

ஆன்டனி: ''காலையிலதான் எங்கேயோ புடிச்சிட்டுப் போறதா பேப்பர்ல படிச்சேன்... முதுமலைக்கா? ஏதோ ஒரு மலைக்குத்தான். எத்தனை நாள்னு தெரியலையே?''

வசந்தகுமார்: ''யானையைத்தானே.. ஊர் ஊராப் புடிச்சிட்டு முதுமலைக்குக் கூட்டிட்டுப் போறதாச் சொன்னாங்க!''

தமிழிசை சௌந்தர்ராஜன்: ''முதுமலை... மனுஷங்களுக்கும் ஏதாவது புத்துணர்வு முகாம் நடத்தச் சொல்லுங்க. பாவம் எல்லோருமே கஷ்டத்துல இருக்காங்க!''  

முதல்வர் ஜெயலலிதாவசம் இருக்கும் துறைகள் என்னென்ன?

விடை: பொதுத் துறை, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை.

சொர்ணமால்யா: ''போலீஸ் டிபார்ட்மென்ட்தான் சி.எம்.கிட்ட இருக்கு!''

தமிழ்நதி: ''பாதுகாப்புத் துறை!''  

ஆன்டனி: ''கண்டிப்பா காவல் துறையும், உள்துறையும் அவங்ககிட்ட இருக்கும்!''

வசந்தகுமார்: ''உள்துறை இருக்கும். மத்தபடி பார்த்தா மொத்தமும் அந்தம்மா கண்ட்ரோல்தானே!''

தமிழிசை சௌந்தர்ராஜன்: ''காவல் துறையும் உள்துறையும் இருக்கு. வேறு என்ன துறைன்னு பார்த்து தான் சொல்லணும்!''

''தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களின் பெயர் என்ன?''

விடை: பா.வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன்

சொர்ணமால்யா: ''எப்போ மாத்தினாங்க? ஒரு வாரமா பேப்பரே படிக்கலை. புரொகிராம்ஸ் நிறைய இருக்கிறதால ரிகர்ஸல்லயே இருக்கேன்!''  

தமிழ்நதி: ''மரியம் பிச்சை இறந்தப்போ மாத்தினாங்களே... அதுவா?''  

ஆன்டனி: மிஸ்டர் ஆனந்தன் அண்ட் மிஸஸ் வளர்மதி. நான் பாஸ் ஆகிட்டேனா பாஸ்?''    

வசந்தகுமார்: ''வளர்மதி அக்காதான். அப்புறம் இன்னொரு ஆளு ஆனந்தனோ யாரோ சொன்னாங்க. தமிழ்நாட்டு அரசியலே சுறுசுறுப்பு இல்லாமப் போயிட்டு இருக்குங்க!''

தமிழிசை சௌந்தர்ராஜன்: ''ரொம்பவும் கஷ்டப்பட்ட வளர்மதிக்கு கொடுத்திருக்காங்க. அப்புறம் வழக்கம்போல யாரும் எதிர்பார்க்காத ஆனந்த்ங்கிற ஒருத்தரை அமைச்சராக்கிருக்காங்க!''