வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (05/11/2018)

கடைசி தொடர்பு:11:47 (05/11/2018)

'அத்த மக ஒன்ன நெனச்சு' புகழ் இளையராஜாவின் கலகலப்பான வீடியோ பேட்டி!

கிராமங்களில், அத்தை மகளைப் பார்த்து பாடும்படியான 'அத்த மக ஒன்ன நெனச்சு' என்ற இவரின் பாடல், யூட்யூபில் 13 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்றால் சும்மாவா? அந்த ஒருபாடல் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது.

இளையராஜா

காரைக்குடிப் பக்கத்தில் உள்ள ஆந்தக்குடி என்ற கிராமத்தில் பிறந்த இவர், தனது ஊரின் பெயரையும் தன் பெயரோடு இணைத்திருக்கிறார். சின்ன வயதிலிருந்து பாடல்கள் என்றால் ஏன் பிடித்தது, தன் குழுவினரோடு எப்படி ஒரு பாடலை உருவாக்குகிறார் என்பதையெல்லாம் கலகலப்பாக இந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். மேலும், தன் பிள்ளைகள் எந்தப் பாட்டை டிக்டாக்கில் விளையாடுகிறார்கள், இவர் பாடல்களில் மனைவி அடிக்கடி பாடச் சொல்லி ரசிப்பது எது என்பதையும் வெட்கத்துடன் சொல்லியிருக்கிறார். 

எல்லாம் சரி, மக்கள் பாடகன் ஆந்தக்குடி இளையராஜா பேசிக்கிட்டே இருந்தா போதுமா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பேச்சு மட்டுமல்ல, மண்மணக்கும் பாடல்களையும் பாடி அசத்தியிருக்கிறார். நல்ல கிராமத்துச் சூழலில், தனது குழுவினரின் கேலி கிண்டல்களோடு அவரின் புகழ்பெற்ற  ‘அத்தமக ஒன்ன நெனச்சு' பாடலையும் அவரின் புதிய பாடல்களையும் பாடியிருக்கிறார். உழைக்கும் மக்களின் வார்த்தைகளுக்கு, நாட்டுப்புற இசைக்கருவிகளின் இசையைத் தந்து மேலும் அழகாக்கியிருக்கிறார் இளையராஜா. அந்தப் பாடல்களை நீங்கள் திரும்பத் திரும்ப கேட்பீர்கள் என்பது நிச்சயம். அவசியம் கேளுங்க. தீபாவளியைப் பாட்டு சரவெடியுடன் வரவேற்று, கொண்டாடுங்கள். அதுக்கு நீங்க உடனே சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணணும். 5.11.2018 மாலை 11.00 மணிக்கு காணத்தவறாதீர்கள். https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fvikatanweb%2Fvideos%2F1713378068772069%2F&show_text=0&width=560