வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (05/11/2018)

கடைசி தொடர்பு:16:16 (05/11/2018)

`வாழ்க்கையை வாழ இன்னொரு வழி இருக்கு!’ - கார்த்தியின் `தேவ்’ டீசர்

 

தேவ்

கார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் 'தேவ்'. ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். சென்னை, ஹதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கும் இந்தப் படத்தில் மூத்தப் பாடகர் எஸ்.பி.பி ஒரு பாடலை பாடியிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.லக்ஷ்மன் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் மற்றும் கார்த்திக் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்த நிலையில், இன்று டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. க்ளீன் ஷேவ் மற்றும் ஹைட் டெக் லைஃப் ஸ்டைலில் கார்த்தி கலக்கியிருக்கும் டீசரை கீழே இருக்கும் லிங்கில் பார்க்கலாம்.  `தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு ரகுல் ப்ரீத்சிங் மற்றும் கார்த்தி கூட்டணி இந்தப் படத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க