வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (05/11/2018)

கடைசி தொடர்பு:18:30 (05/11/2018)

தீபாவளி ஸ்பெஷல்... ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... யார் படம் எந்தச் சேனலில்?

பண்டிகை என்றாலே, ஹிட்டான புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி அந்த நேரத்தை தங்களுடைய தாக்குவதில் எப்போதுமே சேனல்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுவதுண்டு. இந்தத் தீபாவளிக்கு எந்தச் சேனலில் என்ன படம்? ஒரு பார்வை.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற '96 படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சன் லைஃபில் விளம்பர இடைவேளையில்லாத படங்களாக 'விவேகம்' மற்றும் 'சண்டக்கோழி' (பார்ட் 1) ஒளிபரப்பாக உள்ளன.

விஜய் சேதுபதி

ரஜினி,  நானா படேகர் நடித்த 'காலா', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' ஆகிய இரண்டும் விஜய் டிவியின் தீபாவளி சிறப்புத் திரைப்படங்கள். காலா மாலை 6.30-க்கும், விஸ்வரூபம் 2 காலை 11 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளன.

கமல்ஹாசன்

விஜய் நடித்த 'மெர்சல் ' தீபாவளியன்று காலை 10.30-க்கும் 'விஷால், அர்ஜுன் நடிப்பில் வெளியான இரும்புத்திரை' மாலை 5.30-க்கும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.

விஜய்

'காத்திருப்போர் பட்டியல்', 'நிபுணன்' இரண்டு படங்களும் பாலிமர் தொலைக்காட்சியின் தீபாவளித் திரைப்படங்கள்.

'புதுயுகம்' டிவியில் பகல் 1.30-க்கு 'பண்ணையாரும் பத்மினியும்' படம் ஒளிபரப்பாகிறது.

விஜய் சேதுபதி

'வேந்தர்' டிவியில் 2 மணிக்கு 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' படம் ஒளிபரப்பாகிறது.

ஊட்டி வரை உறவு

பெப்பர்ஸ் டிவியில் 2.30 மணிக்கு 'ஊட்டி வரை உறவு' படம் ஒளிபரப்பாக இருக்கிறது.