உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியானது `சர்கார்'! | Sarkar Movie leaked in Tamilrockers?

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (06/11/2018)

கடைசி தொடர்பு:07:57 (07/11/2018)

உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியானது `சர்கார்'!

சட்டத்தை மீறி ‘சர்கார்’ படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார்


விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நேற்று  ‘சர்கார்’படத்தின் எச்.டி. பிரிண்ட்டை வெளியிடப்போவதாகத் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்தது.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடி இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் படத்தை வெளியிட நீதிமன்றத் தடையையும் வாங்கியது. இணையதளத்தில் படம் வெளியாவதை தடுக்கம் விதமாக, திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக  ‘சர்கார்’ படத்தை வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். அவர்கள் சொன்னதுபோல் ஹெச்.டி. பிரிண்ட் வரவில்லை என்றாலும் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி படம் வெளியாகியுள்ளது.