வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:05 (07/11/2018)

`கடாரம் கொண்டான்’ - கமல் வெளியிட்ட விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகரும், மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

கடாரம் கொண்டான்

சாமி ஸ்கொயர் படத்தையடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்கிறார் அக்ஷராஹாசன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃப்ரஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.விக்ரமின் 56-வது படமான இந்தப் படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்கிறார். தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் (வானதி) மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன் (கிபி.1012-1044) கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் #கடாரம்கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.