Published:Updated:

ஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு!

ஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு!

ஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு!

ஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு!

Published:Updated:
##~##
ருபுறம் கறுப்பு-சிவப்பு கரை வேட்டிகள், இன்னொருபுறம் இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் என சூரிய வம்சமும் நட்சத்திரங்களும் ஜொலிஜொலித்த விழா அது! கவிப்பேரரசு வைரமுத்துவின் 'ஆயிரம் பாடல்கள்’ தொகுப்பு வெளியீட்டு விழா. தொகுப்பில் இடம்பெற்றுஇருந்த பாடல்களின் கச்சேரி முடிந்த பிறகு, 'மைக்’ பிடித்த பிரபலங்களுக்குத் தலா ஐந்து நிமிடங்களே 'அலாட்’ செய்யப்பட்டதால், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இரண்டு வரிகளோடு வாழ்த்துரையை முடித்துக்  கொண்டனர். ''இந்தத் தொகுப்பில் ஒரேஒரு பாடலைத் தவிர, என் படங்களுக்கு வைரமுத்து எழுதிய 28 பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன!'' என்று 'ஹாப்பி’யாக ஆரம்பித்தார் இயக்குநர் ஷங்கர். ''பஞ்ச் டயலாக்போல வைரமுத்து பாடல்களில் பஞ்ச் லிரிக்ஸ் இருக்கும். அதை நாங்க 'முந்திரி’ என்போம். 'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி’, 'என் மூச்சில் நீ வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்’னு என் படங்களில் நிறைய 'முந்திரி’கள்!'' என்றவர், 'தேவதை குளித்த துளி களை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்’ என்ற 'ஜீன்ஸ்’ படப் பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி, ''அதைப் படிச்சதும் எனக்கு ஒரே ஆச்சர்யம். ரஹ்மான்கிட்டே, 'இது சரிதானா..? காதலி குளிச்ச நீரை எடுத்துக் குடிக்கிறது  ஓ.கே-தானா?’ன்னு கேட்டேன். 'காதலில் எதுவும் சாத்தியம்’னாரு ரஹ்மான். ஏன்னா,  வைரமுத்துவே 'காதலன்’ படத்தின் இன்னொரு பாட்டில், 'இதில் அற்பமானது எதுவுமில்லை’னு காதல் பத்தி எழுதியிருக்கார்!'' என்று முடித்தார்.
ஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு!

''நான் அஞ்சு நிமிஷம்லாம் பேச மாட்டேன். அதுக்கு மேலதான் பேசுவேன்!'' என்று அதிரடியாக ஆரம்பித்த வாலி பேச்சில், ஆரம்பம் முதல் இறுதி வரை சூடும் சுவையுமான சுவாரஸ்யம். ''என்னை வைரமுத்து நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டப்போ, 'என் உடல்நிலையைக் கருதி கார் அனுப்பணும்’னு கேட்டேன். அவரும் ராஜமரியாதையா கார் வெச்சுக் கூப்பிட்டிருக்காரு. என்ன ஒண்ணு, எலெக்ஷன்ல ஓட்டு போட கூட்டிட்டு வர்ற மாதிரி, போறப்போ கழட்டி விட்டுடக் கூடாது!'' என்று வாலி சொல்ல,

ஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு!

கதர்வேட்டிகள் மத்தியில் கலகல சிரிப்பொலி. ''என்கிட்டே ஒருத்தர், 'ஒரு பாட்டு எழுத எவ்வளவு நேரம் ஆகும்’னு கேட்டாரு. 'அரை மணி நேரம்... இல்லைன்னா, ஒரு மணி நேரம் ஆகும்’னு சொன்னேன். 'அவ்வளவு நேரம் ஆகுமா’னு ஆச்சர்யமா கேட்டாரு. 'இல்லை... புரொடியூசர் கொடுத்த செக் செல்லுமா, செல்லாதான்னு அவ்வளவு நேரம் யோசிப்பேன்’னு சொன்னேன்!'' என்றுதன்னைத் தானே வாரிக்கொண்டவர், வைரமுத்து பக்கம் திரும்பினார். ''கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயண கவி என்று பலருக்கும் பல தனித்தன்மை இருக்கு. வைரமுத்துவுக்கு இருக்கும் தனித்தன்மை விஞ்ஞானரீதியான விஷயத்தைப் பாடல் களில் சொன்ன முதலும் முடிவுமான கவிஞன் என்பதுதான். அவருடைய சிறந்த பாடல்கள் 'முதல் மரியாதை’, 'சிந்து பைரவி’ படப் பாடல்கள்தான்!'' என்ற வாலி, அடுத்துப் பேசியதுதான் சர்ச்சைக்குத் திரி கிள்ளியது!   ''நான் வைரமுத்துவிடம் கருத்து வேறுபாடு கொள்கிற ஒரு விஷயம், அவர் பாட்டு கவித்துவம் உடையது, ஆனா, பாமரர்களுக்குப் புரியுதாங்கிற சந்தேகம்தான். கண்ணதாசன் பாடல்கள் எழுதினாலும் இலக்கியத் துக்கு என்று தனி யாகப் புத்தகம் எழுதினார். அதுதான் சரியானது!'' என்றவர், அடுத்துத் திரும்பியது ஷங்கர் பக்கம். ''ஷங்கர் தன் படத்துப் பாடல் களில் பெரும்பாலும் வைரமுத்து தொகுப்பில் இடம்பெற்றதைப் பத்திப் பெருமையா சொன்னாரு, என்ன செய்றது, நல்ல சிச்சு வேஷன்லாம் வைரமுத்துவுக்குக் கொடுத்துடறாரு. எனக்கு 'முக்காலா முக்காபுலா’ மாதிரிதான் பாடல்கள் எழுத வேண்டிய நிலை. 'He Raped Me’! 'அர்த்தம் இல்லாத பாட்டு வேணும்னா வாலிகிட்டே போங்க’ன்னு ரஜினியே ஷங்கர்கிட்டே சொல்றாரு!'' என்று முடித்தார், புன்னகை ததும்ப!

ஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு!

எழுதி வைத்ததை வாசித்த வைரமுத்து, ''அஞ்சு நிமிஷம் பேசிக்கவா?'' என்று முதல்வர் கருணாநிதியிடம் அனுமதி கேட்டுவிட்டு,  தன் குர்தாவை முழங்கை வரை சுருட்டி மேலே ஏற்றும்போதே புரிந்தது, வாலிக்குப் பதில் சொல்லும் படலம் ஆரம்பம் என்று! ''உங்கள் பாணியில் நீங்கள் இருப்பதும், என் பாணியில் நான் இருப்பதும்தான் அழகு. நீங்கள் ஸ்ரீரங்கத்துச் சிவப்பு. நானோ

ஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு!

வடுகபட்டி கறுப்பு. இதுதான் இயல்பு!'' என்றவர், ''பூம்புகாரில் 'மலையிடைப் பிறவா மணியே என்கோ’ என்று சிலப்பதிகார வரிகள் பாடலாக இடம்பெற்றதால்தான், சாதாரண மக்களிடம் சிலப்பதிகாரம் சென்று சேர்ந்தது. நான் பல நேரங்களில் தமிழை விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருந்ததால்தான் இந்தத் தொகுப்பு சாத்தியமானது!'' என்று 'தன்னிலை’ விளக்கம் அளித்தார்.

இறுதியாக முதல்வரின் வாழ்த்துரை. ''இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டபோது வைரமுத்து, 'அடியே அனார்கலி, உனக்குப் பிறகு உயிரோடு புதைக்கப்பட்டது ஜனநாயகம் தானடி!’ என்று கவிதை எழுதியிருந்தார். 'இப்படி ஒரு கவிதை வரும் என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் ஆட்சியை இழக்கத் தயார்’ என்றேன். 'இல்லை உங்கள் ஆட்சி கவிழக்கூடாது!’ என்றார் வைரமுத்து. எல்லோரும் ஒழுங்காக இருந்தால் நல்லது நடக்கும்!'' என்று சூசகமாக கருணாநிதி உணர்த்தியது அரசியல் 'முந்திரி’!  

படங்கள் : பொன். காசிராஜன்