வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (07/11/2018)

கடைசி தொடர்பு:11:45 (07/11/2018)

`ஹேப்பி பர்த்டே கமல் சார்’ - கமலுக்கு கடாரம் கொண்டானின் வாழ்த்து

விக்ரம் மற்றும் கடாரம் கொண்டான் படக்குழுவினர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

விக்ரம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு வருடமும் தன் பிறந்தநாளுக்கு கமல் நற்பணி இயக்கம் சார்பாக இலவச உதவிகள், ரத்த தானம் போன்றவை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வருடம் தன் ரசிகர்களை உடல் உறுப்பு தானம் செய்யச் சொல்லி கமல் பேசிய ஒரு வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. 

இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி திரைத் துறையினர் பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் நடிகர் விக்ரம், மலேசியாவில் நடைபெற்றுவரும் தன் `கடாரம் கொண்டான்’ பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து படக்குழுவினருடன் இணைந்து வீடியோ மூலம் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சாமி ஸ்கொயர் படத்தையடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் அக்ஷராஹாசன் ஜோடியாக நடிக்கிறார் . கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.