குரூப் டான்ஸர் மும்பையில் திடீர் மரணம்! அனைத்து செலவுகளையும் ஏற்ற அஜித் | Ajith last respect to dancer saravanan

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (07/11/2018)

கடைசி தொடர்பு:16:41 (07/11/2018)

குரூப் டான்ஸர் மும்பையில் திடீர் மரணம்! அனைத்து செலவுகளையும் ஏற்ற அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம், 'விஸ்வாசம்'. இவர்களின் கூட்டணியில் உருவாகும் நாலாவது திரைப்படம் இது. நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம், பொங்கல் அன்று ரிலீஸாக உள்ளது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. 

விஸ்வாசம்


இந்த நிலையில், படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஒரு பாடலின் காட்சிகளைப் படக்குழு படமாக்கிக்கொண்டிருந்தபோது, குரூப் டான்ஸரான சரவணன் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால், படக்குழு அதிர்ச்சியில் உறைந்தது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரவணனின் உடலை சென்னைக்கு எடுத்து வருவதற்கான எல்லாச் செலவுகளையும் அஜித்தே  ஏற்றுக்கொண்டார். மேலும், சரவணனின் வீட்டில் நடந்த இறுதிச்சடங்கில் அஜித் கலந்துகொண்டு சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல்   கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க