`` `சிரிச்சா போச்சு’ ராமருக்கு தனுஷ் பயங்கரமான ஃபேன்..!’’ - பாலாஜி மோகன் | Dhanush big fan of vijay tv ramar, says Balaji mohan

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (08/11/2018)

கடைசி தொடர்பு:12:35 (08/11/2018)

`` `சிரிச்சா போச்சு’ ராமருக்கு தனுஷ் பயங்கரமான ஃபேன்..!’’ - பாலாஜி மோகன்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் `அது இது எது’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியான `சிரிச்சா போச்சு’ எபிசோடுகளுக்கு தனுஷ் தீவிரமான ஃபேன் என்பதை பலர் பல முறை சொல்லியிருக்கிறார்கள். `மாரி’ படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ப்ரேக் நேரங்களில் எல்லாம் `சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சிகளை தனுஷ் ரிப்பீ ட் மோடில் பார்ப்பார் எனப் பக்கத்தில் இருந்து பார்த்த ரோபோ சங்கர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். `அறந்தாங்கி நிஷாவின் காமெடிகளை அதிகம் பார்த்து ரசித்ததால்தான் `மாரி 2’ படத்தில் அவருக்கு ஒரு ரோல் கொடுத்திருக்கிறார் தனுஷ்’ எனச் செய்திகள் வர, அதை இயக்குநர் பாலாஜி மோகனிடம் கேட்டோம்.

தனுஷ்

``ஆமா, தனுஷ் சார் `சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சிக்குப் பயங்கரமான ஃபேன். ரோபோ சங்கரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ` `மாரி’ படத்தில் அவருக்கு ஒரு ரோல் இருக்கு’னு சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டார். `மாரி 2’ எடுக்கும் போது அறந்தாங்கி நிஷாவை ஒரு ரோலுக்காக காஸ்ட் பண்ணச் சொன்னார். அவங்களோட காமெடியை ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்ப்பார். இப்போ சமீபமா ராமருக்கு பயங்கரமான ஃபேனாகிட்டார். அடிக்கடி அவரோட காமெடி வீடியோக்களைத்தான் பார்த்துட்டு இருக்கிறார்’’ என்றார் பாலாஜி மோகன்.