வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (08/11/2018)

கடைசி தொடர்பு:18:25 (08/11/2018)

"நீங்க சொல்ற ஹலோ வேற லெவல்!" - ஜோவைப் பாராட்டும் சிம்பு! #KaatrinMozhi

ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள `காற்றின் மொழி' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.  

காற்றின் மொழி

வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் `துமாரி சுலு.’ இப்படத்தின் ரீமேக்கைத் தமிழில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். ஜோதிகா, லீட் ரோல் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறார். ஹவுஸ் வொய்ஃப்பாக இருக்கும் பெண், ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே ஆகும் வகையில் இந்தப் படத்தின் கதையம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஹெச்.காஷிப் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அவ்வப்போது இப்படத்தின் புகைப்படங்கள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்று `காற்றின் மொழி' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் கார்த்தி வெளியிட்டார். குறும்புத்தனமான ஹவுஸ் வொய்ஃப் ஜோதிகாவுக்கு, ஆர்.ஜே வேலையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கலர்ஃபுல்லாக வெளியாகியுள்ளது காற்றின் மொழி டிரெய்லர். வரும் 16-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.