வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/11/2018)

கடைசி தொடர்பு:21:08 (08/11/2018)

நாடோடிகள் 2-வில் லீட் ரோல்! - திருநங்கை நமீதா அம்முவின் ஹேப்பி ஷேரிங்க்ஸ்

என் நடிப்பை வெளிப்படுத்தும் பெரும் வாய்ப்பை இயக்குநர் சமுத்திரக்கனி சார் வழங்கியுள்ளார்.

திருநங்கைகளுக்கான `மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் ரன்னர் அப் மற்றும் 'டாப் மாடல் ஆஃப் இந்தியா' பட்டத்தை வென்ற நமீதா அம்மு தற்போது நாடோடிகள்-2 திரைப்படத்தில் லீடிங் ரோலில் நடிக்கிறார் இது குறித்து அவரிடம் பேசினேன்.

நமீதா அம்மு

``பொதுவாக, தமிழ் சினிமாவில் திருநங்கைகள் சில சீன்களில் மட்டுமே வந்துபோகும் விதமாக வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், நாடோடி 2-ல் படம் முழுக்க நான் இடம்பெறும் வகையில் கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது. என் நடிப்பை வெளிப்படுத்தும் பெரும் வாய்ப்பை இயக்குநர் சமுத்திரக்கனி சார் வழங்கியுள்ளார். இது, எனக்கு மட்டுமல்ல சக திருநங்கைகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். நாடோடிகள் 2-ல் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

தயாரிப்பாளர், இயக்குநர், சக நடிகர்கள் என எல்லோரும் என் நடிப்பைப் பாராட்டியதோடு, அவர்களில் ஒருத்தியாக என்னை மதிப்புடன் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வெளியான பின், நிச்சயம் ஒவ்வொரு திருநங்கையும் தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். தற்போது தமிழ் உட்படப் பிற மொழிகளிலும் பெண் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு வருகின்றன. ஆனாலும், கதையைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். என்னுடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதைகளுக்கே முன்னுரிமை அளிக்க முடிவெடுத்துள்ளேன். ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டிக்கும் இந்தியாவின் சார்பாகத் தேர்வாகியுள்ளேன். அதற்கும் உடலளவிலும் மனதளவிலும் தயாராகி வருகிறேன். நான் செய்யும் வேலையின் மூலம் கிடைக்கும் தொகையை என்னைப் போன்ற திருநங்கைகளின் வளர்ச்சிக்குச் செலவிட்டு வருகிறேன்" என்கிறார் நமீதா அம்மு தன்னம்பிக்கையோடு.