வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/11/2018)

கடைசி தொடர்பு:21:40 (08/11/2018)

படகுப் போட்டியின் சிறப்பு விருந்தினராக அல்லு அர்ஜுன் !

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். `ஸ்டைலிஷ் ஸ்டார்' என்ற அடைமொழியோடு இருக்கும் இவருக்கு ஆந்திரா, தெலுங்கானா மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன்

அதிலும் குறிப்பாக, கேரளாவில் அதிக ரசிகர்கள் கொண்ட தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜுனுக்கு முக்கியம் இடம் உண்டு. அல்லு அர்ஜுனை செல்லமாக `மல்லு' அர்ஜுன் என்று அழைக்கும் அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார். இந்நிலையில், அவரை கெளரவிக்கும் வகையில் வரும் நவம்பர் 10-ம் தேதி ஆலப்புழாவில் நடக்க இருக்கும் படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள கேரளா அரசு தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பை ஏற்று அப்படகுப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜுன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க