`நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்!’ - சர்காருக்கு கமல்ஹாசன் ஆதரவு | Actor kamalhasan supports sarkar movie

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (08/11/2018)

கடைசி தொடர்பு:19:26 (08/11/2018)

`நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்!’ - சர்காருக்கு கமல்ஹாசன் ஆதரவு

`சர்கார்' திரைப்படத்துக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சர்கார்

விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று 'சர்கார் ' திரைப்படம்' வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே கதை தொடர்பாக பல சர்ச்சைகளைச் சந்தித்து பின் சுமுகமாக திரைப்படம் வெளியானது. அரசியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி அ.தி.மு.க-வினர் இந்தப் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் சர்கார் படத்துக்காக வைக்கப்பட்ட பேனர்களையும் அ.தி.மு.க-வினர் கிழித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கமல்ஹாசன்

இந்த நிலையில், சர்கார் படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.