`போலீஸ் விசாரித்தது உண்மை தான்' - ஏ.ஆர்.முருகதாஸ்! | Sarkar director AR Murugadoss denies police arrest

வெளியிடப்பட்ட நேரம்: 00:55 (09/11/2018)

கடைசி தொடர்பு:00:57 (09/11/2018)

`போலீஸ் விசாரித்தது உண்மை தான்' - ஏ.ஆர்.முருகதாஸ்!

"ர்கார் படத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள தன் வீட்டிற்கு போலீஸார் வந்து விசாரித்தது உண்மைதான்" என்று படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்  தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ்

'சர்கார் படத்தில் உள்ள சர்ச்சையான கருத்துகளை நீக்க வேண்டும்' என்று தமிழகத்தில் ஆளும் கட்சியினர் திரையரங்குகள் முன்பாக போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதோடு  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் பரவின.

முருகதாஸ் ட்விட்

இந்நிலையில், சென்னையில் உள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு இரவில் போலீஸார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், 'கைது செய்யவில்லை; பாதுகாப்புக்காகவே சென்றனர்' என்று போலீஸ் தரப்பில் தெரிவித்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் "போலீஸார் என் வீட்டிற்கு வந்து, கதவைத் தட்டிருக்கிறார்கள். ஆனால், நான் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். ஆனால் இப்போது என் வீட்டிற்கு முன்பாக யாரும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்." என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க