`ஜனநாயகம் அழிந்துவிட்டது!' - 'சர்கார்' விவகாரத்தில் பா.இரஞ்சித் காட்டம் | Director pa.ranjith says few words about sarkar

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (09/11/2018)

கடைசி தொடர்பு:13:10 (09/11/2018)

`ஜனநாயகம் அழிந்துவிட்டது!' - 'சர்கார்' விவகாரத்தில் பா.இரஞ்சித் காட்டம்

'சர்கார்' படத்துக்கு எதிராக ஆளுங்கட்சியினர் நடத்தும் போராட்டம்குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பா.இரஞ்சித், `ஜனநாயகம் அழிந்துவிட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பா இரஞ்சித்

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், 'சர்கார்'. ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்திருக்கும் இந்தப் படம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, வரலட்சுமியின் கேரக்டர் பெயர் 'கோமலவள்ளி'. இந்தப் பெயர், இறந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒரிஜினல் பெயர். இந்தப் பெயர் அ.தி.மு.க-வின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக இருக்கிறது என்று அக்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்கு நேற்று இரவு காவல் துறை கைதுசெய்யச் சென்றதாக தகவல்கள் வந்தன. அது வெறும் ரோந்துப் பணி, பாதுகாப்பு கொடுக்கச் சென்றோம் என்று காவல் துறை விளக்கம் அளித்திருந்தது. இது குறித்து சில தவறான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், 'சர்கார்' குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ``சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும் வன்முறையையும் கையாளுபவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. இந்த நாட்டில், என்றோ 'ஜனநாயகம்' அழிந்துபோய்விட்டது'' என்று காட்டமாகக் கூறியுள்ளார்.  

அனைத்து களேபரங்களுக்கும் மத்தியில், படம் திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தும், விஜய்யின் கட் அவுட்டுகள் மற்றும் படத்தின் போஸ்டர்களை அ.தி.மு.க-வினர் கிழித்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க