வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:13:30 (09/11/2018)

"வயசு வித்தியாசம் முக்கியமில்லை; கார்த்தி எப்போதும் என் மகன்தான்!" - 'மெட்ராஸ்' ரமா

ரமா

'மெட்ராஸ்' படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடிப்பில் ஸ்கோர் செய்தவர், ரமா. கோலிவுட் ஹீரோக்களின் அம்மாவாக நடித்துவருபவரின் பர்சனல் பக்கங்கள் சுவாரஸ்யமானது. அதை உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்கிறார், ரமா. 

"என் இளமைக் காலத்துல தடகளம், சைக்கிளிங், ஸ்விம்மிங்னு பல விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, நேஷனல் லெவல் பிளேயரா இருந்தேன். எதிர்காலத்துல விளையாட்டுத் துறையில்தான் இருப்பேன்னு நினைச்சேன். ஆனா, எதிர்பாராத விதமா நடிக்க வந்துட்டேன். அம்மா கேரக்டரில் மனநிறைவோடு நடிக்கிறேன். 'மெட்ராஸ்' படத்தில் நடிக்கும்போது, என் மகன் கெளதம் ராஜேந்தர் வெளிநாட்டில் படிச்சுகிட்டு இருந்தான். அந்நேரத்தில் கார்த்தியின் அம்மாவா நடிக்கும்போது, என் மகனுடன் இருப்பதுபோல உணர்ந்தேன். எங்க இருவருக்கும் சில வயதுதான் வித்தியாசம். ஆனாலும், எப்போதுமே கார்த்தி என் மகன்போலத்தான். நடிக்கிறதால, தற்போது விளையாட்டில் கவனம் செலுத்த நேரமில்லை. அவ்வப்போது ஸ்விம்மிங் மற்றும் ஷட்டில்காக் பயிற்சிகளை எடுக்கிறேன்.  

'கனா' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையா நடிச்சிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அம்மாவா நடிச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. அப்படத்தில் நடிக்கும்போது, என் இளமைக்கால ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் அடிக்கடி நினைவுக்கு வந்துபோகும். அதை ஐஸ்வர்யாகிட்ட பகிர்ந்துகிட்டேன். ஸ்போர்ட்ஸ் பிளேயரான என் மகன் கெளதம் ராஜேந்தர், ஒரு விளையாட்டு நிறுவனத்துல வேலை பார்க்கிறான். பி.ஏ., படிச்சுகிட்டு இருக்கிற மகள் நந்தினி ராஜேந்தருடன் என் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவேன். என் உலகமே என் குடும்பம்தான். குடும்பம், சினிமா தவிர எதிலும் கவனம் செலுத்துறதில்லை. அடுத்தடுத்து என் பல படங்கள் ரிலீஸாகப்போகுது. இனி, ஓய்வு நேரங்கள்ல ஸ்போர்ட்ஸ்லயும் கவனம்செலுத்த ஆசைப்படறேன். சீக்கிரமே சென்னை அல்லது மலேசியாவில் ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கவும் திட்டமிட்டிருக்கேன்" என்று புன்னகைக்கிறார், ரமா.