வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/11/2018)

கடைசி தொடர்பு:06:00 (11/11/2018)

`சங்கத்தின் விதிகளை மீறாதீர்கள்' - தயாரிப்பாளர் உதயா உருக்கம்!

" 'திமிரு புடிச்சவன்'  வெளியிடுவது எங்கள்  சிறு தயாரிப்பாளர்களைக் குனிய வைத்து தலையை வெட்டுவதற்குச் சமமானது" என்று 'உத்தரவு மகாராஜா'படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான உதயா தெரிவித்துள்ளார். 

உத்தரவு மகாராஜா இசை வெளியீட்டுவிழா

ஆஸிப் குரைஷி இயக்கத்தில்,  நடிகர் உதயா தனது 'ஜேஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உத்தரவு மகாராஜா'. இதில் பிரபு, உதயா, ஸ்ரீமன், மனோ­பாலா, பிரி­யங்கா, ஆடம்ஸ் மற்­றும் பலர் நடித்­துள்­ள­னர்.  இந்தப் படம் வருகிற 16-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்­தின் நாய­கன் உதயா, தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைத்­துள்­ளார்.

திமிரு பிடித்தவன் படத்திக்கெதிராக உதயா வெளியிட்டுள்ள அறிக்கை

அதில், சிறுப் படத்தயாரிப்பாளர்களின் நலன் கருதி, பெரிய படங்களின் ரிலீஸ் தேதியில் சிறு படங்கள் சிக்கிதவிக்கும் நிலையை அறிந்து சிறுபடங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒழுங்குமுறை குழுவின் விதிமுறையைத் தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வந்து, அதை முறைப்படுத்தி, இந்த வாரத்தில் பெரிய படம், இந்த வாரத்தில் சிறிய படம் என்று ஒரு வரைமுறையை கொண்டுவந்தது. அதன்படி  உத்தரவு மகாராஜா, காற்றின் மொழி, செய், சித்திரம் பேசுதடி 2 ஆகிய நான்கு படங்களூக்கு நவம்பர் 16-ம் தேதி அன்று ரிலீஸ் தேதியை ஒதுக்கியுள்ளது. ஆனால், தீபாவளிக்கு வரவேண்டிய 'திமிரு புடிச்சவன்' திரைப்படம் அன்றைய தேதியில் வராமல், சிறு படங்களுக்கு ஒதுக்கியுள்ள நவம்பர் 16-ம் தேதி அன்று ரிலீஸ் செய்ய முயல்வது தயாரிப்பாளர் சங்கத்தை மீறிய செயல் மட்டுமல்ல, சிறு தயாரிப்பாளர்களை குனிய வைத்து தலையை வெட்டுவதற்குச் சமமானது. ஆகவே, இதைப் புரிந்துகொண்டு ஒழுங்குமுறை குழு ஒதுக்கி தரும் தேதியில் தங்களின் படத்தை ரிலீஸ் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று படத்­தின் நாய­கன் உதயா கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும், தயாரிப்பாளர் சங்கம் தன் கடமையை செய்யும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க