வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (11/11/2018)

கடைசி தொடர்பு:13:45 (11/11/2018)

விரைவில் உங்களைத் தலைவராக பார்க்க வேண்டும்’ - தோனியை சந்தித்த குஷியில் விக்னேஷ் சிவன்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த அனுபவத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன்

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மேலும் சமூக வலைத்தளங்களில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும் பிரபலங்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். கிரிக்கெட்டில் தனக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிடிக்கும், அவர் தனது முன்மாதிரி எனப் பலமுறை கூறியுள்ளார் . இவர் அண்மையில் தோனியை சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை நேற்று இரவு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் புகைப்படத்துடன்  "இவரைச் சந்திப்பதுதான் எனது வாழ்நாள் கனவு. இதுதான் என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான நாள். இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. இவர் இந்த நாட்டை வழிநடத்துவதைப் பார்க்க ஆவலாக உள்ளேன் " என்று ட்விட்டரில்  குறிப்பிட்டு இருந்தார். இன்ஸ்டாகிராம் பதிவில்' தனது முன் மாதிரியை சந்தித்தது மகிழ்வளிக்கிறது. உன்னத தலைவர் தோனி. #FuturePM' என்ற ஹேஷ்டேக்குடனேயே தோனியையும் டேக் செய்து பதிவிட்டிருந்தார் விக்னேஷ்.