`ரஜினி-யின் '2.0' அவதாரங்கள்'! - வைரலாகும் மேக்கிங் வீடியோ #2Point0 | 2.0 making video released

வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (17/11/2018)

கடைசி தொடர்பு:19:59 (17/11/2018)

`ரஜினி-யின் '2.0' அவதாரங்கள்'! - வைரலாகும் மேக்கிங் வீடியோ #2Point0

நடிகர் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கும் பிரமாண்ட படம், '2.0'. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம், நவம்பர் 29 -ம் தேதி திரைக்கு வருகிறது.

இதையடுத்து, படத்தின் புரொமோஷன் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் தீவிரம்காட்டிவருகிறது. அந்த வகையில், படத்தின் ட்ரெய்லர், சிங்கிள் டிராக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனது. அதேபோல, சமீபத்தில் `2.0’ வில்லன் அக்‌ஷய் குமாரின் மிரட்டல் லுக் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஓடும் இந்த மேக்கிங் வீடியோவில், படத்துக்காக அக்‌ஷய் குமார் உள்ளிட்ட கலைஞர்களின் உழைப்பு பேசப்பட்டது.

இதேபோன்று, தற்போது படத்தின் ஹீரோ ரஜினிகாந்த்தின் கெட்டப் உருவான விதம்குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த்தின் `2.0’ அவதாரங்கள் என்கிற பெயரில் வெளியாகியுள்ள இந்த வீடியோ, சுமார் 1.19 நிமிடம் ஓடுகிறது. அக்‌ஷய் குமாரின் தோற்றத்தைப்போலவே, ரஜினியும் இந்தப் படத்துக்காக நிறைய உழைத்துள்ளது வீடியோ பார்க்கும்போதே தெரிகிறது. இந்த வீடியோக்கள், படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க