வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (22/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (22/11/2018)

பஞ்சாபி மொழியில் ரீமேக் ஆகிறது `சிங்கம் !’

2010-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சிங்கம்'. இதன் சீக்வலாக 'சிங்கம் 2', 'சிங்கம் 3' ஆகிய படங்கள் வெளியாகின. இருந்தும் முதல் பாகமான 'சிங்கம்' படத்துக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சிங்கம்

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்த இப்படம் கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமெக் செய்யப்பட்டு, அங்கேயும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. கன்னடத்தில் சுதீப், இந்தியில் அஜய் தேவ்கன், பெங்காலியில் ஜீத் ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, இப்படத்தை பஞ்சாபி மொழியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். அதை நவநீத் சிங் என்பவர் இயக்க, ஹீரோ - ஹீரோயினாக பர்மிஷ் வர்மா - சோனம் பாஜ்வா ஜோடி நடிக்க இருக்கிறது. 

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு..!    

நீங்க எப்படி பீல் பண்றீங்க