வைரலான மீம்... சிவகார்த்திகேயன் ரசிகருக்குப் பதிலளித்த பிரசன்னா! | prasanna replies for sivakarthikeyan fan in twitter

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (22/11/2018)

கடைசி தொடர்பு:18:40 (22/11/2018)

வைரலான மீம்... சிவகார்த்திகேயன் ரசிகருக்குப் பதிலளித்த பிரசன்னா!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தின இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் டீசர், பாடல்களைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த அப்டேட் பற்றிய அறிவிப்பு (நவ.22) இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்திருந்த ஒருவர், இணையத்தில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் - பிரசன்னா இருக்கும் மீமை பதிவிட்டிருந்தார்.

மீம்

அவரைத் தொடர்ந்து, ஶ்ரீனிவாசன் என்பவர், ``பிரசன்னா தொகுத்து வழங்குவது போரடிக்கிறது. அவர் சுமாரான நடிகர். இன்னும் அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர்" என்று கூறியுள்ளார். அவருக்குப் பதிலளித்த பிரசன்னா, ``டியர் ஶ்ரீனி, தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை. நான் சுமாரான நடிகர் என்றால், அதை மேம்படுத்திக்கொள்கிறேன். இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.          

பிரசன்னா

நீங்க எப்படி பீல் பண்றீங்க