வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (23/11/2018)

கடைசி தொடர்பு:21:31 (23/11/2018)

`நா வாசிச்சதுக்கு அப்புறம்தான் தளபதி படமே ரிலீஸாகும்!' - சர்வம் தாளமயம் டீசர்

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள `சர்வம் தாளமயம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வம் தாளமயம்

ரிலீஸுக்கு முன்பே டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைக் குவித்த படம் `சர்வம் தாளமயம்’. மைண்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவியாதவின் கேமராவுக்கு ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், மதன் கார்கி, அருண்ராஜா ஆகியோர் எழுதியுள்ளனர்.

டைரக்ஷனுடன் சேர்த்து பாடல் ஒன்றுக்கு ராஜீவ்மேனன் இசையமைத்துள்ளார். மதன்கார்கி வரிகளில் ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய `வரலாமா’ என்ற பாடலுக்கு அவர் இசையமைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உட்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படம் டிசம்பர் 28-ம் தேதியன்று திரைக்கு வரும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.